அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒரு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து தலா 25,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

