டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர் சுற்றுலாத் துறையை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில், கொழும்பு துறைமுகத்திற்கு வந்த அதி சொகுசு பயணக் கப்பலான “மெய்ன் ஷிஃப்”பிரதி அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றுளார்.
900 பேர் கொண்ட குழுவினருடன் TUI குரூஸால் இயக்கப்படும் ஜேர்மன் பயணிகள் கப்பலான “மெய்ன் ஷிஃப்” இன்று (03) 2,700 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இக்கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகளில் 1,600 க்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் ஒன்றரை நாள் சுற்றுலா செல்லவுள்ளனர்.
காலி, மாது ஓயா, களுத்துறை மற்றும் கொழும்பு போன்ற இடங்களுக்கு குறித்த குழு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்

