கொத்மலை அணை உடைந்ததாக பரவும் தகவல் பொய்யானது..!

கொத்மலை அணை உடைந்ததாக பரவும் தகவல் பொய்யானது..!

கொத்மலை அணை உடைந்ததாக தற்போது வெளியாகி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என குறித்த நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பிலுள்ள பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ‘அத தெரண’ வினவியபோது, நிலவும் மழையினால் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு 2 அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் வினாடிக்கு 80 கனமீற்றர் நீர் வெளியேற்றப்படுவதாகவும் அந்தப் பொறியியலாளர் குறிப்பிட்டார்.

 

நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுவதற்கு முன்னர் சைரன் ஒலி எழுப்பப்பட்டதாகவும், இது சாதாரண நிலைமை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

கொத்மலை அணை உடைந்ததாகவும், அதனால் அணைக்குக் கீழ்ப்பகுதியில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வந்தது.

 

இதன் காரணமாக அப்பிரதேச மக்கள் தற்போது மேடான பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

Recommended For You

About the Author: admin