தொடரும் சீரற்ற காலநிலை: 132 பேர் உயிரிழப்பு: 171 பேரை காணவில்லை..!

தொடரும் சீரற்ற காலநிலை: 132 பேர் உயிரிழப்பு: 171 பேரை காணவில்லை..!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதுடன் 171 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், காணாமல் போனோரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அவற்றை அண்மித்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள், உடனே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் மலையகப்பகுதிகளில், மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin