முல்லைத்தீவு நிலவரம்..!
ஊடகவியலாளர் Mathi Suddy பதிவில் இருந்து முல்லைத்தீவில் மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதனால் மாத்திரமே அங்கு பிரசினைகள் இருப்பதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம்.
அங்கு தற்போது படிப்படியாக மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. முல்லை நகரில் மின்சாரம் வழமைக்குத் திரும்புகிறது.
நான் மாங்குளம் ஊடாக ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு – முள்ளியவளை ஊடாக, கேப்பாப்புலவு, கள்ளியடி, புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் வரை சென்றிருந்தேன். உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தினருடன் பரந்தனில் இருந்து இணைந்து பயணித்தேன்.
மீள வரும்போது புதுக்குடியிருப்பு, மன்னகண்டல் ஊடாக ஒட்டுசுட்டான், மாங்குளம் ஊடாக யாழ் நோக்கி இப்போது பயணிக்கிறேன்.
முல்லைத்தீவைப் பொறுத்தவரை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். சில இடங்களில் வெள்ளம் தேங்கி நிக்கிறது.
மற்றும்படி முல்லைத்தீவை பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளதாகவும் மக்கள் பெரும் துயரில் இருப்பதாகவும் வதந்திகள் பல உலாவுகிறது அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியில் கண்டாவளை, பெரியகுளம் பகுதியில் பாலம் ஒன்று சேதமடைந்துள்ளதால் அதனூடான போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


