பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்..!

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்..!

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு காணாமல் போனவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் உயிர் மீட்பு பிரிவினர், கடற்படை உயிர் மீட்பு பிரிவினர் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து காணாமல் போனவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin