தனியாருக்கு கடற்கரை காணிகளை விற்காதே..! மூதூரில் மக்கள் போராட்டம்

தனியாருக்கு கடற்கரை காணிகளை விற்காதே..!
மூதூரில் மக்கள் போராட்டம்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்தும் அவற்றை

மீட்டுத் தருமாறு கோரியும் இன்று (24) காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் (குளோபல் சீ பூட்) நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

மூதூர் தக்வா நகர் கடற்கரை பள்ளிவாசலிலிருந்து தொடங்கிய இந்தப் ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதான வீதி ஊடாக சென்று மூதூர் பிரதேச சபையில் முடிவடைந்தது.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மூதூர் பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் ரோஸானாவிடமும் மகஜரைக் கையளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், சமூக நல அமைப்புகள், மீனவர்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin