48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA..!

48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA..!

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச,

குறித்த 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு வழங்கப்படாவிடின், எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு குறிப்பிட்ட காலவரையறையுடன் கூடிய தீர்வுத் திட்டத்தை அறிவிப்பதன் மூலம், தற்போது சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தீர்க்க உடனடியாகத் தலையிட வேண்டும் எனத் தமது சங்கம் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin