IMFஇன் அடுத்த கட்ட கடனுதவி தொடர்பான தீர்மானம் டிசம்பரில்…!

IMFஇன் அடுத்த கட்ட கடனுதவி தொடர்பான தீர்மானம் டிசம்பரில்…!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வை நிறைவு செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகள் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாட்டை கடந்த ஒக்டோபர் 09 ஆம் திகதி எட்டினர்.

அதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையானது எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி இந்த மீளாய்வை பரிசீலிக்க உள்ளது.

அத்துடன் அங்கு நிறைவேற்று சபையின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதன் பின்னர் சுமார் 347 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இலங்கைக்கு கிட்டும்.

Recommended For You

About the Author: admin