பஸ் கட்டணம் செலுத்துவதற்கு வங்கி அட்டைகள் மூலம் நாளை முதல் வசதி
பொருத்தமான சாதனங்கள் உள்ள பேருந்துகளில் பயணிகள் வங்கி வழங்கிய கடன் மற்றும் பற்று அட்டைகளைப் (Credit and Debit Cards) பயன்படுத்தி பஸ் கட்டணங்களைச் செலுத்த முடியும் என்ற வசதி நாளை (நவம்பர் 24) முதல் தொடங்குகிறது.
இந்த வசதியின் தொடக்க நிகழ்வு நாளை காலை மாகும்புர போக்குவரத்து மையத்தில் நடைபெறவுள்ளது.
இது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் அனுசரணையில், டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து கூட்டுத் திட்டமாக நடத்தப்படுகிறது.
சமீபத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ரத்நாயக்க, அட்டைப் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், பயணிகள் கட்டணம் செலுத்திய பின்னர் மீதிப் பணம் கிடைக்காமல் போவது என்ற ஒரு முக்கியமான பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
பஸ் கட்டணங்கள் தொடர்பான பரவலான மோசடி மற்றும் ஊழலுக்கு ஒரு தீர்வாக இந்த தெரிவை பல மக்கள் கோரியதாகவும் அவர் மேலும் கூறினார்.

