தங்காலையில் தம்பதியினர் சுட்டுக் கொலை: விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்!
தங்காலையில், கபுஹேன பகுதியில் தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
கொல்லப்பட்ட 68 மற்றும் 59 வயதுடைய இந்தத் தம்பதியினர், உனக்குருவே சாந்தாவின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6:50 மணியளவில், இருவரும் தமது கடையில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்கள், தாங்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை சீனிமோதற பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

