நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த புதிய இராஜதந்திரிகள்..!
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மாரி கெதரின் மார்ட்டின், நெதர்லாந்து இராச்சிய தூதுவர் வீபே ஜேகோப் டி போயர், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெதிவ் ஜோன் டக்வேர்த், அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதுவர் அப்துநோர் ஹொலிஃபி மற்றும் அயர்லாந்து ஜனாநாயகக் குடியரசின் தூதுவர் பெனடிக்ட் ஹஸ்குல்டிசன் ஆகியோர் இவ்வாறு நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

