கச்சாய் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உள்ள கதை கூறல் போட்டி..!
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சாவகச்சேரிப் பிரதேசசபையின் கச்சாய் பொது நூலகத்தினால் நூலக எல்லைக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான கதை கூறல் போட்டி நிகழ்வு 06.11.2025 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நூலக மண்டபத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேற்படி கதை கூறல் போட்டி நிகழ்வில் பங்குபற்றும் முகமாக நூலக எல்லைப் பரப்பிற்குட்பட்ட முன்பள்ளிகளில் இருந்து தலா இரண்டு சிறார்களை மாத்திரம் பங்குபற்றச் செய்யுமாறு நூலகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

