பகிடிவதை குற்றச்சாட்டு: வவுனியா மாணவர் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு..!

பகிடிவதை குற்றச்சாட்டு: வவுனியா மாணவர் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு..!

வவுனியா பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்றைய தினம் (03) உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழத்தில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்

ஏனைய மாணவர்களுடன் மதுபானம் அருந்தியதன் பின்னர் அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அவர் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதை காரணமாகவே உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் காவல்துறையில் முறைப்பாடளித்திருந்தனர்.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் பூவரசன்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து இருந்தனர்.

அத்தோடு, மாணவரின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றிருந்தது.

எவ்வாறாயினும் அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin