உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு!

சமூகப் பாதுகாப்பு வரி விதிக்கப்பட்டதன் பின்னர் பெரும்பாலான உணவு வகைகளில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.

வரி விதிக்கப்பட்ட உடனேயே, பெரும்பாலான பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

மதிய உணவுப் பொதியின் விலையை அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் இதுவரை எந்தவொரு கூட்டு தீர்மானமும் எடுக்கவில்லை என்றும், ஆனால் பெரும்பாலான ஹோட்டல்கள் உணவுப் பொதியின் விலையை ரூ.10, ரூ.15, மற்றும் ரூ.20 என உயர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் முடிவு

இந்த விலையேற்றத்தால் பிரைட் ரைஸ், கொத்து மற்றும் இதர துரித உணவு வகைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

லிட்ரோ எரிவாயுவின் சமீபத்திய விலைக் குறைப்பு, மதிய உணவுப் பொதிகளின் விலையை ஒரு கணிசமான விலையில் வைத்திருக்க மிகவும் உதவியாக இருந்தது.

எவ்வாறாயினும், நாளை முதல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை லிட்ரோ நிறுவனம் குறைத்த பின்னர் முடிவை அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor