இலங்கை மத்திய வங்கி ஆளுனர் வெளியிட்டுள்ள செய்தி!

எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டாலும் அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்ற முயற்சிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மருத்துவ சங்கத்தின் 135வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார மந்தநிலை ஏற்படும் போது அது நாட்டின் அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் சுகாதார துறைக்கும் இது பொதுவானது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலவச சுகாதார சேவைகள் வழங்கப்பட்டாலும், நாட்டில் அனைவரும் அதற்கு வரி செலுத்துவதாகவும், வரையறுக்கப்பட்ட வளங்களுக்குள் சுகாதாரம் பேணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்று சுகாதார அத்தியாவசிய சேவைகள் எனவும் தெரிவித்தார். அடுத்த வருட தொடக்கத்தில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது சாத்தியமாகும் என நந்தலால் வீரசிங்க நம்பிக்கை தெரிவித்தார்

Recommended For You

About the Author: webeditor