எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்த தொலவத்த..!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

