பரிசு பொருட்களுடன் மகிந்தவை காண வீடு தேடி சென்ற சீன பிரஜைகள்..!

பரிசு பொருட்களுடன் மகிந்தவை காண வீடு தேடி சென்ற சீன பிரஜைகள்..!

சீனாவை சேர்ந்த வர்த்தகர்கள் குழு ஒன்று தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தனர்.

இதன்போது இந்தக் குழுவினர் முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கியதோடு, அவரது நலனைப் பற்றியும் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

முன்னாள் ஜனாதிபதி கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலைக்கு சென்ற பின்னர், அவரைச் சந்திக்கச் செல்லும் முதல் சீன வர்த்தகக் குழு இதுவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

தேயிலை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்தக் குழு, வெலிகம மற்றும் நுவரெலியாவுக்குச் செல்லும் வழியில் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin