இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு: கல்வி, பெண்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து பேச்சு
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை கல்வி, பெண்கள் அதிகாரம், புத்தாக்கம், அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் மீனவர்களின் நலன் உட்படப் பரந்த அளவிலான துறைகளை உள்ளடக்கியதாக இருந்தது.
இந்தச் சந்திப்பிற்குப் பின்னர், பிரதமர் மோடி தனது ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில், “நெருங்கிய அண்டை நாடுகள் என்ற வகையில், எமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், எமது பொதுப் பிராந்தியத்தின் செழிப்புக்கும் எமது ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது,” என்று பதிவிட்டுள்ளார்.

