கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு கிராம மட்டங்களில் கடமையாற்றும் அலுவலர்களுடனான விசேட கலந்துரையாடல்..!

கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு கிராம மட்டங்களில் கடமையாற்றும் அலுவலர்களுடனான விசேட கலந்துரையாடல்..!

கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம மட்டங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாயினி இன்பராஜ், மேலதிக அரசாங்கதிபர் (காணி) திருமதி அஜிதா பிரதீபன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்
ச.மோகனபவன் மற்றும் நான்கு பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள்,கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள, மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிராம மட்டத்தில் இனங்காணப்படும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக அறிந்து அவற்றை முடிவுறுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தித் திட்டங்கள், நிர்வாகச் செயற்பாடுகள், அரசின் புதிய கொள்கை வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்செல்வதற்கான விடயங்கள் குறித்தும் கடமையின் பொருட்டு உத்தியோகத்தர்கள் எதிர்கொள்கின்ற இடர்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

Recommended For You

About the Author: admin