பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு சந்தேகநபர் நேபாளத்தில் கைது!
பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரத்ன, (கணேமுல்ல சஞ்சீவ) கொலை வழக்குடன் தொடர்புடையவர் எனக் கோரப்பட்ட இஷாரா செவ்வந்தி என்பவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் நேபாள காவல்துறை ஆகியன இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

