கலாசார ஊர்வலத்துடன் ஆரம்பமானது யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெரு விழா..!
யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.09.2025) பி. ப. 01.00 மணிக்கு யாழ் புனித யுவானியர் தேவாலய முற்றலில் இருந்து கலாசார ஊர்வலம் ஆரம்பமாகி பி. ப. 01.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தினை வந்தடைந்ததனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் கேட்போர் கூடத்தில் பண்பாட்டுப் பெரு விழா ஆரம்பமாகியது.


