உலக சிறுவர் தின தேசிய நிகழ்ச்சித் திட்டம்..!
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உலக சிறுவர் தின தேசிய நிகழ்ச்சித் திட்டம் – 2025 இன்றைய தினம்(03.10.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.திரு.எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்றது.
” உலகை வழி நடாத்த அன்பால் போஷியுங்கள்” என்னும் தொனிப்பொருளில் உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டதற்கு அமைவாக இன்றைய தினம் ” பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்பள்ளி ஆசிரியர்களின் வகிபாகம்” என்ற தலைப்பில் முல்லைத்தீவு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் 120 பேருக்கு சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு, சிறுவர் உளவியல், மழலைகளுக்கான கற்றல் முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் கருத்தரங்காக அமைந்திருந்தது.
இதன் வளவாளராக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.இளங்கீரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்தக் கருத்தரங்கில் உதவி மாவட்டசெயலாளர் லிசோ கேகிதா, மாவட்ட முன்பிள்ளைப் பருவ உத்தியோகத்தர் திரு.ம.கிருசாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


