காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட முதியோர் தின நிகழ்வு
காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குரிய கண்ணகி முதியோர் சங்கத்தினால் சர்தேச முதியோர் தின நிகழ்வானது காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் கஜேந்திரன் அவர்களின் முன்னெடுப்பில் சங்கத்தினரால் இன்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அததிதியாக காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் கஜேந்திரன், மாவட்ட மற்றும் பிரதேச செயலக முதியோர் செயலக அபிவிருத்திய உத்தியோகத்தர்கள் மகேஸ்வரன்,மதுசுதனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது அதிதிகளுக்கு மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.இதன் போது கலந்து கொண்ட அதிதிகள் முதியோர்களின் முக்கியத்துவம் பற்றியும் இவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் கௌரவிக்கப்படவேண்டியவர்கள் எனவும் இவர்களது சிறப்புக்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.அத்துடன் இம்முறை தரம் ஜந்து புலமைபரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக பெற்று சித்தியடைந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட மாணவர்கள் பாராட்டப்பட்டதோடு க. பொ. த சாதாரண பரிட்சையில் 9A சித்தி பெற்ற மாணவர்களும் பரிசில்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
மேலும் காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட வயதில் மூத்த சிரேஷ்ட பிரஜைகள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வின் போது முதியோர்களுக்கான பலூன் ஊதி உடைத்தல், கண் கட்டி ஜோக்கட் சாப்பிடுதல் போன்ற பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



