மாவனெல்ல மணிக்காவவில் அனர்த்தம்: மண்மேடு சரிந்து கட்டுமான தொழிலாளர்கள் மூவர் பலி

மாவனெல்ல மணிக்காவவில் அனர்த்தம்: மண்மேடு சரிந்து கட்டுமான தொழிலாளர்கள் மூவர் பலி

​மாவனெல்ல, மணிக்காவவில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​நேற்று (செப்டம்பர் 29) காலை இச்சம்பவம் நடந்தபோது மூன்று தொழிலாளர்கள் அந்த இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

​மாவனெல்ல, அளுத்நுவர பகுதியில் தொழிலாளர்கள் குழுவொன்று சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மண்மேடு அவர்கள் மீது சரிந்து விழுந்தது.

​இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்கும் நோக்குடன் நேற்று (செப் 29) முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், மூவரும் சடலங்களாகவே மீட்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: admin