கொழும்பு 02 இல் பாடசாலை வேன் விபத்து: 3 மாணவர்கள் உட்பட 4 பேர் காயம்
கொழும்பு 02, வோக்ஸ்ஹால் வீதியில் (Vauxhall Street) இன்று காலை பாடசாலை வேன் ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துடன் மோதியதில், மூன்று பாடசாலை மாணவர்களும் வேன் சாரதி ஒருவரும் காயமடைந்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் வேனில் மாணவர்கள் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

