8 மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை எச்சரிக்கை: இன்று (அக் 01) முதல் அமுல்

8 மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை எச்சரிக்கை: இன்று (அக் 01) முதல் அமுல்

வளிமண்டலவியல் திணைக்களம் வட மத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மாவட்டங்களுக்காக வெப்பமான காலநிலை தொடர்பான ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

​திணைக்களத்தின்படி, நாளைய தினம் (அக்டோபர் 01) முதல் அமுலாகும் வகையில் 08 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

​மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையைக் குறிக்கும் வெப்ப சுட்டெண் (Heat Index), இந்த மாவட்டங்களின் சில இடங்களில் ‘அக்கறை கொள்ள வேண்டிய நிலை’ (Caution level) வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

​நீண்ட நேரம் வெயிலில் இருப்பதாலும், நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் சோர்வு ஏற்படக்கூடும் என்றும், தொடர்ச்சியான செயல்பாடு வெப்பத் தசைப்பிடிப்புக்கு (heat cramps) வழிவகுக்கும் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin