திஸ்ஸமஹாராமையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொலை; கள்ளக்காதல் தகராறு காரணமாம்!
திஸ்ஸமஹாராமையில் உள்ள முதியம்மகாமாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தின்போது அவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் ஒன்றினால் சுடப்பட்டுள்ளார்.
முதியம்மகாம பாடசாலைக்கு அருகில் உள்ள அவரது வாகனப் பழுதுபார்க்கும் இடத்தில் (Garage) வைத்து அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேகநபர், கொல்லப்பட்ட நபரின் மகனின் மனைவியுடன் கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும், இந்தச் சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

