காரைதீவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்..!
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் காரைதீவின் முன்னாள் தவிசாளரால் நினைவேந்தல்
தன் ஆயுளை அழித்து தமிழ் இனத்தின் ஆயுளை எழுதிய தியாகத்தின் உச்சம் திலீபன் அவர்களின் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி நிகழ்வானது இன்றைய தினம்(25/09/2025) காரைதீவின் முன்னாள் தவிசாளரும் தமிழரசுக்கட்சியின் காரைதீவு கிளையின் தலைவருமான கி்.ஜெயசிறில் தலைமையில் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.இதன் போது திலீபன் அவர்களுக்கு மலர் தூவி தீபசுடரேற்றி அஞ்சலியினை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


