இந்திய உயர்ஸ்தானிகர் மகிந்த ராஜபக்சவை தங்கல்லையில் சந்திப்பு
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை புதன்கிழமை அன்று, தங்கல்லையில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் சந்தித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளை நீக்கும் புதிய சட்டத்தின் காரணமாக, கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ அரச இல்லத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட பின்னரே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், முன்னாள் ஜனாதிபதிகள் அரச நிதியுதவி பெறும் வீடுகள் மற்றும் பிற சலுகைகளை கைவிட வேண்டும் எனக் கூறுகிறது.
இந்தச் சந்திப்பை இந்திய தூதரகம் சமூக ஊடகப் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.


