இலங்கை ஒக்டோபர் 2025 இல் முதன்மை பயணத் தளமாகத் தெரிவு!

இலங்கை ஒக்டோபர் 2025 இல் முதன்மை பயணத் தளமாகத் தெரிவு!

​சர்வதேச சுற்றுலாப் பத்திரிகையான ‘டைம் அவுட்’ (Time Out), 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சிறந்த பயணத் தளங்களின் வருடாந்திரப் பட்டியலில் இலங்கையை முதலிடத்தில் வைத்துள்ளது.

​’டைம் அவுட்’ பத்திரிகை, இலங்கையின் இதமான வெப்பமண்டல காலநிலை, வளமான கலாசார பாரம்பரியம், மற்றும் இயற்கை எழில் ஆகியவற்றை முதன்மையான காரணிகளாக கணித்துள்ளது. இவை ஒக்டோபர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சிறந்த இடமாக இலங்கையை வைத்திருப்பதற்கு உதவுவதாகவும் இந்த பத்திரிகை குறிப்பிடுகிறது.

 

​கடற்கரைகள், மலைநாட்டுப் பயணங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வனவிலங்குச் சஃபாரிகள் எனப் பலவற்றை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

​இந்தப் பட்டியலில் இலங்கைக்கு அடுத்தபடியாக, இலையுதிர் கால நிறங்கள் மற்றும் பருவ விழாக்கள் காரணமாக துருக்கி மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகியன இடம்பெற்றுள்ளன. இவற்றுடன், ஸ்பெயினின் வலென்சியா, நியூயார்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ருமேனியாவின் திமிஷோரா, சான் பிரான்சிஸ்கோ, மற்றும் நமீபியா ஆகியனவும் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

​காலநிலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் அக்டோபரில் சிறப்பாக அனுபவிக்கக்கூடிய தனித்துவமான பயண அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ‘டைம் அவுட்’ தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin