சோள இறக்குமதியால் உள்நாட்டு சோள உற்பத்தியாளர்களுக்கு கடும் பாதிப்பு..! சஜித் குற்றச்சாட்டு

சோள இறக்குமதியால் உள்நாட்டு சோள உற்பத்தியாளர்களுக்கு கடும் பாதிப்பு..! சஜித் குற்றச்சாட்டு

அறுவடைக் காலத்தில், சோளத்தை இறக்குமதி செய்வதால், உள்நாட்டு சோள உற்பத்தியாளர்கள் கடும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு அண்மையில் மேற்கொண்ட பயணத்தின் போது இதனை அறிய முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சோளத்திற்கு 140 ரூபாய் உத்தரவாத விலை வழங்கப்பட்டது.

 

இருப்பினும், அரசாங்கம் 3 இலட்சம் மெட்ரிக் டொன் சோளத்தை இறக்குமதி செய்ததால், உற்பத்தியாளர்கள் சோளத்தை 115 முதல் 120 ரூபாய் வரையில் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

அத்துடன், அரசாங்கத்தின் இந்தச் செயல்பாட்டால் ஏற்பட்ட நட்டம் காரணமாக, ஒரு கிலோ சோளம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin