அனுமதிப்பத்திரம் இன்றி மரக்குற்றிகள் ஏற்றிவந்தவர் கைது..!
கொடிகாமம் பிரதேசத்தில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தில் மரக்குற்றிகளை ஏற்றிவந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதடி பகுதியில் சனிக்கிழமை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சாவகச்சேரி பொலிஸார் சிறிய ரக பாரவூர்தியை மறித்து சோதனை மேற்கொண்ட போது அனுமதிப்பத்திரம் இன்றி விறகுகள் ஏற்றிச்சென்றமை தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து பாரவூர்தியை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று சோதனை மோற்கொண்டதில் விறகுக்குள் மறைத்து பல இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளை சட்டவிரோதமாக கொண்டு சென்றமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


