யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் துறை ஒத்துழைப்புடன் படகுச் சவாரி திட்டம் ஆரம்பம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க அரசாங்கம் தனியார் துறையுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு அமைவாக, சீலிங்க் லெஷர் (Sealink Leisure Pvt Ltd) தனியார் நிறுவனத்தினால் யாழ்ப்பாணம், மண்டைதீவில் புதிய படகுச் சவாரித் திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர், இந்த முயற்சி யாழ்ப்பாணப் பகுதிக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க உதவும் என்று தெரிவித்தார்.

