“அலுவலக நடத்தை ” தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு..!

“அலுவலக நடத்தை ” தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு..!

முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் மென் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட பயிற்சி அலகின் ஏற்பாட்டில் “அலுவலக நடத்தை (Office Behavior )” எனும் தலைப்பிலான பயிற்சி நிகழ்ச்சியானது இன்றைய தினம்(18) தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தர் யோ.மதுசூதன் அவர்களின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக முல்லை மணி பயிற்சி மண்டபத்தில் நடைபெற்றது.

 

இந் நிகழ்ச்சியின் வளவாளராக முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் திரு.சி.குணபாலன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார் .

 

இவர் தனது விரிவுரையிலே அலுவலகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகள், வினைத்திறனான தொடர்பாடல் முறைகள் போன்ற விடயங்களினை நடைமுறை உதாரணங்களுடன் விரிவாக தெளிவு படுத்திருந்தார்.

 

இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் வளவாளர் திரு.சி.குணபாலன் அவர்கள் இலங்கை நிர்வாக சேவையின் விசேட வகுப்பிற்கு உயர்வு பெற்றமைக்கும் வெகு விரைவில் வட மத்திய மாகாண சபையின் அமைச்சொன்றின் செயலாளராக பதவி உயர்வு பெறவுள்ளமையை கருத்தில் கொண்டு பயிலுனர்களினால் பாராட்டப்பட்டார்.

 

இந்தப் பயிற்சி நிகழ்ச்சியில் மாவட்ட செயலகத்தினை சேர்ந்த பெருமளவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர் .

Recommended For You

About the Author: admin