பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பாடசாலை வாகனங்கள் ; திடீர் சோதனையில் வெளிப்பட்ட விடயம்..!

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பாடசாலை வாகனங்கள் ; திடீர் சோதனையில் வெளிப்பட்ட விடயம்..!

மாதம்பே, சிலாபம் மற்றும் ஆரச்சிகட்டுவ பொலிஸ் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 பேருந்துகள் மற்றும் வேன்கள் பொலிஸாரின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 வேன்களில் 53 வேன்கள் மாணவர்களை ஏற்றிச் செல்ல தகுதியான நிலையில் இல்லை என்று மாதம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

மேலும், பரிசோதனையின் போது 24 வாகனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாதம்பே போக்குவரத்து பொலிஸ் பிரிவு கூறுகிறது.

 

இதில் ஒரு வாகனம் மட்டுமே மாணவர்களை ஏற்றிச் செல்ல ஏற்ற நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin