Clean Sri Lanka திட்டத்தின், வறுமை ஒழிப்பு “சமூக சக்தி” நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு..!

Clean Sri Lanka திட்டத்தின், வறுமை ஒழிப்பு “சமூக சக்தி” நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு..!

மேன்மை தங்கிய ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைந்த Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் “சமூக சக்தி” வேலைத்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு இன்றைய தினம்(16) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணிவரை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

 

குறித்த கருத்தரங்கில் ‘சமூக சக்தி’ வேலைத்திட்டம் தொடர்பில் வளவாளராக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் சாரதாஞ்சலி மனோகரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

 

இதன்போது சமூக வலுவூட்டல் மூலம் வறுமை ஒழித்தல் என்னும் தொனிப்பொருளில் இவற்றை செயற்படுத்தவுள்ள சமூக அபிவிருத்திக் குழுவின் சட்ட அடிப்படை, ஆக்க அமைவு, ஸ்தாபிப்பு மற்றும் பணிகள் தொடர்பில் தெளிவான விளக்கங்கள் திணைக்களங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டன.

 

இந்தக் கருத்தரங்கில் மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் முதலானோர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin