மக்களின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக முடியாது – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
மக்களின் உணர்வுகளுக்கு கட்டுப்படாத ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் கணக்கில் அவர் வெளியிட்ட பதிவில், ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்தாலும், மக்களின் அன்பு ஒருபோதும் முடிவடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.
“என் வாழ்க்கையின் பெரும்பகுதி மக்களுடனேயே கடந்துவிட்டது. இன்றும் அதுவே உண்மை. ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடையலாம், ஆனால் மக்களின் அன்பு அந்த காலத்தை விடவும் நீடித்தது. அது ஒருபோதும் முடிவடையாது. மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருந்தபோதும், அதிகாரத்தில் இல்லாதபோதும் மக்கள் அவருடன் இருந்தனர்,” என்று அவர் அந்தப் பதிவில் தெரிவித்தார்.
தனது கார்ல்டன் இல்லத்திற்கு வருகை தந்து ஆசி வழங்கும் மகா சங்கத்தினருக்கும், தன்னை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கும் மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

