நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலை குறைப்பு..!

நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலை குறைப்பு..!

பல உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் பிரைட் ரைஸ், கொத்துரொட்டி, பிரியாணி மற்றும் முட்டை ரொட்டி ஆகிய உணவுகளின் விலைகள் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

 

குறித்த விடயத்தை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஸான் தெரிவித்துள்ளார்.

 

அத்தோடு, அனைத்து வகையான சிற்றுண்டி உணவுகளின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த விலைக் குறைப்பு நேற்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஸான் தெரிவித்துள்ளார்.

 

இந்த விலைக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் வழங்குமாறு உணவக உரிமையாளர்களை கேட்டுக்கொள்வதாகவும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஸான் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin