ஓட்டமாவடியிலிருந்து கோழி ஏற்றிச்சென்ற வாகனம் ஏறாவூரில் விபத்து.!
இன்று(02.09.2025) காலை ஓட்டமாவடியிலிருந்து கோழி ஏற்றிச்சென்ற வாகனம் ஏறாவூரில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், பயணித்த எவருக்கும் தெய்வாதீனமாக எந்தவித ஆபத்தும் இல்லை என்பதுடன், வாகனம் குடைசாய்ந்து சேதத்துக்குள்ளாகியுள்ளது.
இலேசான மழைத்தூறலுடன் பிறேக் கோளறு காரணமாக இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


