தென்மராட்சி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்..!
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம்( 01.09.2025) திங்கட்கிழமை காலை தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்டது.
தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் நகரங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சாவகச்சேரி நகரத்தில் நகரசபைத் தவிசாளர் தலைவர் வ.ஶ்ரீபிரகாஸும், கொடிகாமம் பிரதேசத்தில் பிரதேச சபை தவிசாளர் குகதாசனும் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது சாவகச்சேரி வணிகர் கழகத்தினர், முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், சந்தை வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் எனப்பலரும் கையெழுத்துப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்


