வெலிமடை கெப்பட்டிபொலவையை சேர்ந்தவர்கள் அறுகம்பைக்கு சுற்றுலா வந்த பேருந்து கோமாரி பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி 6 கல்வெட்டுக்களை உடைத்துக்கொண்டு கால்வாய்க்குள் விழுந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் பலர் பலத்த காயமடைந்ததுடன் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
விபத்து சம்பவித்த பேரூந்தில் சுமார் 52 பேர் பயணித்ததாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் சகோதர இனத்தை சேர்ந்த சிங்கள மொழி பேசுகின்ற ஒரே குடும்பத்து உறவுகள் என தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறையிலுள்ள பௌத்த விகாரையை வழிபட்டுவிட்டு அறுகம்பை செல்லும் வழியிலே விபத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்
பாதிக்கப்பட்டவர்கள் பொத்துவில் மற்றும் திருக்கோயில் வைத்தியசாலைகளுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு அம்பாறை வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்
சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது


