யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகம்: செப்.1ஆம் திகதி திறப்பு
வட மாகாண மக்களுக்கு கடவுச்சீட்டுச் சேவைகளை இலகுபடுத்தும் வகையில், யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகம் செப்டம்பர் 1ஆம் திகதி திறக்கப்படவுள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலா தெரிவித்துள்ளார்.
அரசின் அத்தியாவசிய பொதுச் சேவைகளை பரவலாக்கி, பிராந்திய அணுகலை மேம்படுத்தும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, வவுனியா, மாத்தறை மற்றும் குருணாகல் ஆகிய இடங்களில் குடிவரவு அலுவலகங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டதைத் தொடர்ந்து இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த புதிய அலுவலகம் வடக்கு மாகாண மக்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் விசா தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கான அணுகலை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

