எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நல்லாட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில், பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் குழுவொன்று ஜலனி பிரேமதாசவின் தனியார் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டதாக முறைப்பாடு வழங்கிய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பத்தொன்பது அரசு ஊழியர்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டதாக இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர்கள் தங்கள் பணியுடன் தொடர்பில்லாத வேலைகளை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
அதாவது, சஜித் பிரேமதாசாவின் மனைவியின் பணி, அவரது அரசியல் பணி மற்றும் அவரின் தனிப்பட்ட பணி ஆகியவற்றை செய்வதற்கு குறித்த ஊழியர்கள் பணிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

