பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜராகியதை தொடர்ந்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசாரணைகளுக்காக தன்னை கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது.
இதனையடுத்து, இன்று காலை ஆஜரான பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று மேல்நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.


