வடக்கு – கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம்

வடக்கு – கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுவருகின்றது.

குறித்த நீதி கோரி கையெழுத்து போராட்டம் , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (29.08.2025) காலை முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும், இன்று ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையியில் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர் அந்த வகையில் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரன், சுகாஸ், சர்வேஸ்வரன்,கஜதீபன் உள்ளிட்ட பலர் நிகழ்வை ஆரம்பித்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin