வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்..!
வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று (28.08.2025) மாவட்டச் செயலாளர் திரு பி.ஏ. சரத்சந்ர தலைமையில் நடைபெற்றது.
வரவிருக்கும் பெரும்போகத்தில் நெற் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் ஆரம்பிப்பது குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
நெற் பயிர்ச்செய்கைக்கு மேலதிகமாக, மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பிற பயிர்ச்செய்கைகள் மற்றும் விவசாய அமைப்புகளில் நிலவும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
விவசாயம், கமநல சேவைகள், நீர்ப்பாசனம் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல நிறுவன அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.


