ஹபரண, ஹிரிவடுன்ன பகுதியில் சிமெந்து ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்றுடன் மோதியதில், 10 வயதுடைய யானைக்குட்டி ஒன்று இன்று காலை (27) உயிரிழந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
ஹபரண-தம்புள்ள வீதியில் ஹிரிவடுன்ன பாடசாலைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியை கடக்க முற்பட்ட யானைக்குட்டி, திருகோணமலையில் இருந்து வந்த லொறியுடன் மோதியுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு அதிகாரிகள் யானைக்குட்டிக்கு அவசர சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி அது உயிரிழந்தது.
விபத்தைத் தொடர்ந்து லொறி சாரதியான கெகிராவையைச் சேர்ந்த ஒருவரும் லொறியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யானைக்குட்டி, ஹிரிவடுன்ன ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானைக் கூட்டத்தைச் சேர்ந்தது என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹபரண பொலிஸார் மற்றும் மின்னேரியா வனவிலங்கு அலுவலகம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

