இலவச காணி பத்திரம் வழங்கும் அங்குரார்ப்பணநிகழ்வு..!

இலவச காணி பத்திரம் வழங்கும் அங்குரார்ப்பணநிகழ்வு..!

வளமான நாடு அழகிய வாழ்வு எனும் கருப்பொருளுக்கமைய, காணியற்றோருக்கான இலவச காணிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (13.08.2025) காலை 09.00 மணிக்கு பளை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கெளரவ கே. டீ. லால்காந் அவர்கள், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன பிரதி அமைச்சர் கெளரவ டாக்டர் சுசில் ரணசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் ஆகியோரின் விசேட விருந்தினர்களின் பங்குபற்றுதலுடன் இலவச காணி பத்திரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சின் செயலாளர் திரு. டி. பி. விக்கிரமசிங்க , யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டார்கள்.

Recommended For You

About the Author: admin