வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு எதிரன வழக்கு தள்ளுபடி

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு எதிராக மூத்த நிர்வாக அதிகாரிகளான இளங்கோவன் செந்தில் நந்தனன் சிவகுமார் ஆகியோரால் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் நேற்று(29.09.2022) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு
வடக்கில் கடமையாற்றிய குறித்த மூன்று நிர்வாக சேவை அதிகாரிகளையும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து வடமாகாண ஆளுநர் மாகாணத்தில் இருந்து விடுவித்திருந்தார்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட மூன்று அதிகாரிகளும் ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார் என ஊடகங்களில் போர் கொடி தூக்கிய நிலையில் நீதிமன்றத்தையும் நாடியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக இருந்த இளங்கோவன் வடமாகாண விவசாய பணிப்பாளராக இருந்த சிவகுமார் மற்றும் சுகாதார அமைச்சின் வடக்கு செயலாளராக இருந்த செந்தில் நந்தனன் ஆகியோர் தமது பணியிட மாற்றத்தில் நிர்வாக வரம்பு மீறப்பட்டதாக பல்வேறு காரணங்களை காட்டி சட்டத்தரணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

வழக்கு தள்ளுபடி

குறித்த வழக்கு ஏற்கனவே ஒரு தடவை விசாரணைக்காக எடுக்கப்பட்டு திகதியிடப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை விசாரணை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடுணர்களினால் தமது இடமாற்றத்தின் நியாயப்பாடுகள் மற்றும் சட்ட வரம்பை மீறியமை தொடர்பில் முன்வைக்கக்கூடிய போதிய ஆதாரங்கள் இல்லாமையால் குறித்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor